To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesu En Idhaya | இயேசு என் இதய

Loading

இயேசு என் இதய தெய்வம்
ஏற்றிடுவேன் துதி கீதம் – இயேசு

சரணங்கள்
அதிசயமாம் அவர் நாமம்
அளிக்கும் மெய் சமாதானம்
அகமதிலே அருள்தனையே
அளிக்கும் அருள் நிறை தெய்வம் – இயேசு

வானத்தின் கீழ் பூமி மேலே
வேறில்லை மீட்டிடும் நாமம்
இகமதிலே இறை மகனாம்
இரட்சகர் இயேசு என் தெய்வம் – இயேசு

பாவங்கள் போக்கிடும் நாமம்
சாபங்கள் தீர்த்திடும் நாமம்
பேய்தனையே நோய்களையே
போக்கும் அடைக்கல நாமம் – இயேசு

துதித்திடும் நாவுகள் யாவும்
துங்கவன் இயேசுவின் நாமம்
அகிலமுமே அவர் பெயரால்
முடங்கும் முழங்கால் யாவும் – இயேசு

என் உள்ளமே அவர் நாமம்
என்றும் துதித்திடு வாயே
வின்னதிலே சேர்த்திடுமே
மன்னவன் இயேசுவின் நாமம் – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS