To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesu Maanidanaayp Piranthar | இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

Loading

இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே – இயேசு

ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு

யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு

பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு

அந்நாளும் ஆலயத்தில் – அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி
தூயனைப் புகழ்ந்தனரே – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS