To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesuvin Iraththaththaalum | இயேசுவின் இரத்தத்தாலும்

Loading

பல்லவி
இயேசுவின் இரத்தத்தாலும் தேவனின் கிருபையாலும்
மீட்கப்பட்டோர்கள் ஆனந்தம் பாடி ஆண்டவருடன் சேருவார்

சரணங்கள்
மேகத்தில் எக்காளமே – இயேசு
வருகையில் தொனித்திடுமே
அன்பருடன் அவர் பக்தர் பலர்
ஆயத்தமாய் வருவார் – இயேசுவின்

அத்திமரம் துளிர்க்குதே – அந்த
புத்திரர் இஸ்ரவேலர்
பத்திரமாக கூடிச் சேர – வேத
சத்தியம் நிறைவேறுதே – இயேசுவின்

ஜொலித்திடும் நட்சத்திரங்கள் – பல
வீழ்கின்ற நாளிதுவே
பாவத்தை வெறுத்து பயத்தோடு ஜீவித்து
இயேசுவைப் பின் செல்லுவோம் – இயேசுவின்

தூதனின் கரங்களில் ஓர்
கோப கலசத்தைப் பார்
ஐயோ என்றொரு தொனி கேட்குதே
ஐங்கண்டங்கள் எங்குமே – இயேசுவின்

காலம் இனி செல்லாதே – கர்த்தர்
இயேசு வருகின்றாரே
ஆவியும் அவர் மணவாட்டியும்
கூவி அழைத்திடுவார் – இயேசுவின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS