Iyaesuvin Naamam Ongidavae | இயேசுவின் நாமம் ஓங்கிடவே

Loading

இயேசுவின் நாமம் ஓங்கிடவே
நேசமுடன் புகழ் பாடிடுவோம்
காசினியில் நிகர் வேறதற்கில்லை
தாசர்கள் நாம் துதி சாற்றிடுவோம்

அனுபல்லவி
வானமும் பூமியும் யாவையுமே
வார்த்தையினால் உண்டாக்கினவர்
என்னை மண்ணென்று நினை வாக்கினவர்
எனக்கென்றும் சொந்தமவர்

அற்புதமாம் அதிசயமாம்
ஆண்டவர் இயேசுவின் நாமமதே
பேய் நடுங்கும் கடும் நோய் அகலும் – நல
பேர் புகழ் ஓங்கிடும் நாமமதே

வாழ்ந்திடும் வானோர் பூதலத்தோர்
வாழ்த்தி வணங்கிடும் நாமமதே
மானிடரின் முழங்கால் மடங்கும் மெய்
மேன்மை உயர் திரு நாமமதே

சாவு பயங்கள் நீங்கிடவே
சத்துரு மேல் ஜெயம் பெற்றிடவே
சோதனையில் பல வேதனையில் – என்
சொந்த அடைக்கல நாமமதே

வந்துன்னைச் சேர்ப்பேனென்றுரைத்த
வல்ல கிறிஸ்தேசுவின் நாமமதே
நீடுழியாய் நித்திய ராஜ்யத்திலே – தம்
நாமமதை நான் போற்றிடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS