Iyesuvin Naamam Anbin | இயேசுவின் நாமம் அன்பின்

இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

கூனர் நிமிர்ந்திட செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும் பரலோக நாமம் – இயேசுவின்

சாத்தான் வீழ்ந்திட சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும் புண்ணிய நாமம் – இயேசுவின்

வஞ்சகம் நீக்கிட தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும் புனித நாமம் – இயேசுவின்

வறுமை நீக்கிட அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும் புனித நாமம் – இயேசுவின்

அநீதி நீக்கிட அருமை பெற்றிட
குருதி சிந்திட குறைவில்லா நாமம் – இயேசுவின்

உண்மை வளர்ந்திட ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம் – இயேசுவின்

அறுவடை பெருகிட ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம் – இயேசுவின்

Close Menu
error: Content is protected !!