Iyesuvin Naamame | இயேசுவின் நாமமே

Loading

பல்லவி
இயேசுவின் நாமமே! கிறிஸ்து
இயேசுவின் நாமமே!
வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே!

அல்லேலூயா (4)
அல்லேலூயா (4)

மாந்தர் போற்றும் நாமம் – வின்
தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம்

பாவம் போக்கும் நாமம்
வாழ்வளிக்கும் நாமம்
நித்தியா ஜீவனருளும் ஈடில்லாத நாமம்

பேய் நடுங்கும் நாமம்
நோய் அகற்றும் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத நாமம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS