To Advertise Contact - christmusicindia@gmail.com

Jeeviyame Ore Jeeviyame | ஜீவியமே ஒரே ஜீவியமே

Loading

ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே

பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
இதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் – ஜீவியமே

நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர்
அவர் யாரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
அலறலும், புலம்பலும் உடல்தனைக் கீறலும்
நரகத்தின் தினசரிக் காட்சி கேளீர்
இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் – ஜீவியமே

திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
‘என்ஜனம் அழியுதே’ என ஏங்கும் ஆண்டவர்
துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
முன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை – ஜீவியமே

எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
காதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்த பின் வருவதேது?
கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் – ஜீவியமே

அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன்
கல்வி, செல்வம், சுகம் பொருள் அனைத்தும்
செல்வேன், சொல்வேன் இயேசுவை வழி என
வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் – ஜீவியமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS