Karam Patri Nadanthiduven | கரம் பற்றி நடந்திடுவேன்

Loading

கரம்பற்றி நடந்திடுவேன்
கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்
அவர் காட்டும் வழியில்
உண்மையாய் நடந்து
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

இராஜாதி இராஜாவுக்கே – மகிமை
இயேசு ராஜனுக்கே
இறங்கிடும் தேவ ஆவியே – என்னை
நிரப்பிடும் வல்ல ஆவியே

சத்துரு கொட்டைகளை இயேசு
இரத்தத்தால் ஜெயித்திடுவேன்
சத்திய ஆவி துணைகொண்டு என்றும்
புதுபெலன் அடைந்திடுவேன்

நெருக்கங்கள் வரும்போது – என்
நேசர் என் பட்சமுண்டு
துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன்
அவர் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

அற்புதம் நடந்திடுமே – என்றும்
மாறிடா தேவ அன்பால்
அல்லேலூயா பாடிடுவோம் – நம்
அதிசய தேவனுக்காய்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS