To Advertise Contact - christmusicindia@gmail.com

Kirubaiyithe Deva Kirubaiyithe | கிருபையிதே தேவ கிருபையிதே

Loading

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவிய பாதையிலே இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே – கிருபையிதே

எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்த்தனரே – பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய – கிருபையிதே

அன்பின் அகலமும் நீளமும் உயரமும்
ஆழமும் அறிந்துணர அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – கிருபையிதே

நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்தியா ஜீவனை நாம் பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் – கிருபையிதே

ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீர் பார் உனக்காய்
நாயகன் இயேசு நாம் வெளிப்படுவார் – கிருபையிதே

வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் – வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை – கிருபையிதே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS