To Advertise Contact - christmusicindia@gmail.com

Konja Kaalam Iyaesuvirkaaga | கொஞ்ச காலம் இயேசுவிற்காக

Loading

கொஞ்ச காலம் இயேசுவிற்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நாம் காணும் போது

அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்
ஆனந்த கண்ணீர் வடித்தேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்தநாடு சுதந்தரிப்பேன் – கொஞ்ச

கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் – கொஞ்ச

இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் – கொஞ்ச

வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும்
என்னைப் பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே – கொஞ்ச

பலியாக காணிக்கையாக
படித்தேன் உமக்காக
என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை – கொஞ்ச

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS