Maaridaar Emmaa Nesare | மாறிடார் எம்மா நேசரே

Loading

மாறிடார் எம்மா நேசரே ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே

ஆ இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே

பாவியாக இருக்கையிலே – அன்பாய்
பாரில் உன்னை தேடி வந்தாரே
நீசன் என்றுனைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே – ஆ! இயேசுவின்

உள்ளத்தால் அவரை தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே – ஆ! இயேசுவின்

ஆவியால் அன்பைப் பகர்ந்திட – தூய
தேவனின் விண்சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க – ஆ! இயேசுவின்

நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே – ஆ! இயேசுவின்

பயமத்தை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே – ஆ! இயேசுவின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS