To Advertise Contact - christmusicindia@gmail.com

Manamirangum | மனமிரங்கும்

Loading

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

யேகோவா ரஃப்பா…….. இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் – மாமி
கரத்தை பிடித்து தூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று – அவள்
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்

குஷ்டரோகியை கண்டார் – இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாக்கு – என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்

நிமிர முடியாத கூனி – அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள் மேலே வைத்தார் – உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்

பிறவிக் குருடன் பர்த்திமேயு – அன்று
இயேசுவே இறங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான் – உடன்
இயேசு பின்னே நடந்தான்

கதறும் பேதுருவைக் கண்டு – இயேசு
கரங்கள் நீட்டிப் பிடித்தார்
படகில் ஏறச் செய்து – அவர்
கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS