To Advertise Contact - christmusicindia@gmail.com

Marurooba Malaimeethilae | மறுரூப மலைமீதிலே

Loading

மறுரூப மலைமீதிலே
மகிமையைக் கண்டவாழ்வினிலே
மகாபெலன் வந்திறங்கிடுதே

உன்னத ஜீவன் புறப்படுதே
உயர் ஸ்தலம் மீதிலே ஏற்றிடுதே
மகிமை மகிமை மா மகிமை விளங்கும்
மலைவாசம் என் மனம் மகிழும் – மறுரூப

தேவ பர்வத கொடுமுடியில்
தேவ சமூகம் இறங்கிடுதே
அருணோதயம் போல் மேகமும் நிழலிடுதே
அண்ணல் வாக்கங்கு தொனித்திடுதே – மறுரூப

கன்மலைத் தேனும் அருந்திடவே
என் ஆவி ஆத்துமா செழித்திடுதே
ஈது வாழ்வை போஷிக்கும் பங்கிதுவே
எங்கள் யாக்கோபின் சுதந்திரமே – மறுரூப

அக்கினிக் கோட்டை சூழ்ந்திடுதே
ஆவியின் பெலனே காத்திடுதே
ஜெயமே ஜெயமே தீங்குநாளின் அரணே
உபவாசம் நல் அனுபவமே – மறுரூப

ஆச்சரியமான ஆலோசனை
அன்பரின் பாதம் கிடைத்திடுமே
ஜெயமாய் முழங்கும் ஸ்தோத்திரம் ஆராதனையும்
ஜெபதூபம் அங்கேறெடுப்பேன் – மறுரூப

சீயோனில் கர்த்தர் ஏற்றிடுவார்
சீக்கிரம் நம்மைச் சேர்த்திடுவார்
ஒலிவ மலைமேல் அன்றவர் பாதம் நிற்கும்
ஒளியாம் ஏசு வந்திடுவார் – மறுரூப

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS