To Advertise Contact - christmusicindia@gmail.com

Motcha Veettai | மோட்ச வீட்டை

Loading

மோட்ச வீட்டை நான் என்று சேர்வேன்
தூய தூய தேவா

அனுபல்லவி

அல்லேலூயா தோணி கேட்குதே
அங்கே சென்று நானும் பாடுவேன்

சரணங்கள்
பொற்றள வீதியில் உலாவுவேன்
பொன் மாளிகையில் நான் தங்கிடுவேன்
முள் முடி சூடிய இயேசுவை
பொன் முடிசூட்டி நான் போற்றிடுவேன் – அல்லேலூயா

கண்ணீர் யாவும் கர்த்தர் தாமே
கனிவுடன் கரத்தால் துடைப்பாரே
நல்ல போராட்டம் என் ஓட்டமும்
நலமுடன் ஓடி முடித்திடுவேன் – அல்லேலூயா

புதிய எருசலேம் வாசல்கள்
பூரிப்புடன் என்னை அழைக்குதே
எண்ணிலா பக்தர்கள் தூதர்கள்
என்னரும் இயேசுவையும் காணுவேன் – அல்லேலூயா

கல்லறை தோட்டம் அங்கே இல்லை
குறுகின ஆயுசுள்ளோர் அங்கில்லை
சாவு பவனி அங்கே இல்லை
சஞ்சலம் பஞ்சமும் அங்கே இல்லை – அல்லேலூயா

புவி யாத்திரை முடியும் போது
பதீசில் சென்றிளைப்பாறுவேன்
எக்காளம் தொனிக்கும் நேரத்தில்
எழும்பி என் பங்கை நான் பெற்றிடுவேன் – அல்லேலூயா

ஜீவ புஸ்தகம் திறந்திடும்
ஜீவ தேவன் என்னைக் கூப்பிடுவார்
ஜீவனுக்குள் பிரவேசித்து
ஜீவனுள்ளோர் தேசத்தில் நடப்பேன் – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS