To Advertise Contact - christmusicindia@gmail.com

Naesar Avar En Naesaravar | நேசர் அவர் என் நேசரவர்

Loading

நேசர் அவர் என் நேசரவர்
நேசரிலெல்லாம் விசேஷித்தவர்
சோகமடைந்தேன் நேசமதால் – நேசர்

வெண்மையும் சிவப்புமானவரே
கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே
பதினாயிரங்களில் சிறந்தவரே
அதிசயமானவர் அவர் பெயரே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே – நேசர்

அவர் தலை முழுதும் பொன்மயமாமே
அவர் தலைமயிர் சுருள் சுருளாமே
காகத்தின் நிறம் அவர் முடியாமே
லோகத்தின் ஒளி விளக்கவராமே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே – நேசர்

அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்
கவரும் புறாக்கண்கள் போன்றவைகள்
பாலிலே கழுவப்பட்டவைகள்
நேர்த்தியாய் பதிக்கப் பட்டவைகள்
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே – நேசர்

அவரின் கன்னங்கள் உதடுகளாம்
மலர்களின் வாசனை வீசிடுமாம்
தங்க வளையல் போல் அவர் கரமாம்
தந்தத்தைப் போல் அங்கம் உடையவராம்
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே – நேசர்

ரூபமதில் அவர்க்கிணை அவரே
லீபனோன் மகிமை உடையவரே
கேதுரு போல் அவர் உயர்ந்தவரே
ஏதுமிலா சிறப்பானவரே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே – நேசர்

வார்த்தை பேசிடும் வாய் மதுரமாமே
வார்த்தைகள் கிருபை பொழிந்திடுமே
வார்த்தை என்பது அவர் ஒரு பெயரே
வார்த்தைகளால் துதி சாற்றிடவே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே – நேசர்

துள்ளிக் குதித்து மலை மேட்டினிலே
வந்திடும் நேசரின் தொனியதுவே
ஆரவார சப்தம் முழங்கிக் கொண்டே
மேகமதில் ஜோதியாய் தோன்றுவாரே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே – நேசர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS