To Advertise Contact - christmusicindia@gmail.com

Nam Devan Anbullavar | நம் தேவன் அன்புள்ளவர்

Loading

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர் நமக்காய் ஜீவன் தந்த இயேசு அவரே

நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ அந்த அன்பில்மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்

அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே

வான மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே

அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS