Nammudaiya Deivam Iyaesuvallaal | நம்முடைய தெய்வம் இயேசுவல்லால்

Loading

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த
நாநிலத்தில் வேறு தெய்வமில்லை

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் அது
பாக்கியமுள்ளது எனப்படுமாம் – நம்முடைய

பாவ மறியாத பரிசுத்தராம் இயேசு
பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – நம்முடைய

கற்சிலை பேசுமோ வாய் திறந்து – நம்
கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – நம்முடைய

பற்பல கிருபைகள் பகருகின்றார் – நாம்
கற்புடன் அவர் பணி செய்திடவே – நம்முடைய

மறப்பாளோ தாய் தன் பாலகனை நான்
மறப்பதில்லை என்றும் அன்பு தெய்வம் – நம்முடைய

ஏறெடுக்கும் நம் தேவைகட்கு – அவர்
மாறாமல் பதில் தரும் மகிபனவர் – நம்முடைய

சகலமும் படைத்த சர்வாதி காரி – இயேசு
சகலமும் ஜெயித்திட்ட பரிகாரி – நம்முடைய

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS