To Advertise Contact - christmusicindia@gmail.com

NANDRI NIRAINTHA – Eva. A Wesley Maxwell – Lyrics

Loading

நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்-2
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்-2

என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர்-2 — நன்றி நிறைந்த

1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை-2
என்னை தோளில் தூக்கி சுமந்த
அவர் அன்பை மறப்பேனோ-2 — என் இயேசு

2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை-2
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன்-2 — என் இயேசு

3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு-2
என் கால்கள் சறுக்கின நேரம்
அவர் கிருபை தாங்கினதே-2 — என் இயேசு

error: Content is protected !!
ADS
ADS
ADS