To Advertise Contact - christmusicindia@gmail.com

NEE UYIRODU – Eva. Albert Solomon- Lyrics

Loading

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை
நான் மோசேயோடே இருந்ததுபோல
உன்னோடு இருப்பேன் என் மகனே (மகளே)

திகையாதே, கலங்காதே
நீ போகும் இடமெல்லாம் வருவேன் – (2)

1. தாய் தன் சேயை மறந்துபோனாலும்
நான் உன்னை மறப்பதில்லை
துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில்
அடைக்கலமாய் இருப்பேன் – (2) – திகையாதே

2. உன் ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல்
நான் உன்னை தாங்கிடுவேன்
தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது
நான் உன்னை ஏந்திடுவேன் – (2) – திகையாதே
– நீ உயிரோடு

error: Content is protected !!
ADS
ADS
ADS