To Advertise Contact - christmusicindia@gmail.com

Pirasannam Thaarum Devane | பிரசன்னம் தாரும் தேவனே

Loading

பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடிவந்தோம்

சரணங்கள்
பக்தர்கள் போற்றும்நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேரூபீன் சேரா பின் துதிபாடிடும்
பரனே நின்பாதம் பணிகின்றோம் – பிரசன்னம்

நீரல்லால் இந்தப் பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடுமே – பிரசன்னம்

நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல அருள் தந்திடுமே – பிரசன்னம்

தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன் – பிரசன்னம்

வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம் – பிரசன்னம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS