Ponnaana Iyaesuvai | பொன்னான இயேசுவை

Loading

பொன்னான இயேசுவை புண்ணிய நல் நேசரை
கொண்டு செல்வோம் பூலோகமெங்கும் – அவர்
ஒன்றே வழி என்றே கூறுவோம்

தேவனே வந்து நம்மை நடத்திடுவார்
தேவையறிந்து பயன்படுத்திடுவார் – 2

அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதனால்
அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம் – 2
அரணான கொட்டைகளை பிடித்திடுவோம் – 2 – பொன்னான

எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
இந்நாளில் எங்கள் மூலம் நிச்சயம் செய்வார் – அவர்
எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும்
இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் – பொன்னான

காலமும் கடலலையும் காத்திருக்காது – இந்த
காலத்திலே உலகைக் கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் -பொன்னான

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS