Potriduven En Iyaesuvaiye | போற்றிடுவேன் என் இயேசுவையே

போற்றிடுவேன் என் இயேசுவையே
புகழ்ந்து பாடிடுவேன்
இதயத்தின் தெய்வமாம் இயேசு
என் வாழ்க்கையின் ஆரம்பம் இயேசு

மனுவாக வந்தவர் இயேசு
மனப்பாரங்கள் நீக்குவார் இயேசு
ஜீவனின் அதிபதி இயேசு
பரிசுத்தம் அளிப்பவர் இயேசு

தம்மிடம் வருவோரை இயேசு
தயங்காமல் அணைப்பவர் இயேசு
மறுவாழ்வு அளிப்பவர் இயேசு
மகிமையில் சேர்ப்பவர் இயேசு

சமாதானம் நல்கிடும் இயேசு
மன மகிழ்ச்சி காரணர் இயேசு
சாந்தியும் அளிப்பவர் இயேசு
வாழ்வுக்கு துணையாளர் இயேசு

Close Menu
error: Content is protected !!