To Advertise Contact - christmusicindia@gmail.com

Saenaiythiban Nam | சேனையதிபன் நம்

Loading

சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
அறிந்து அகமகிழ்வோம்

பல்லவி
ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே – ஜெய

தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே – ஜெய

மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார் – ஜெய

சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் – ஜெய

கறை, திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் – ஜெய

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS