To Advertise Contact - christmusicindia@gmail.com

Seeyonile En Thida | சீயோனிலே என் திட

Loading

பல்லவி
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே – அவர்
நான் என்றும் நம்பும் கன்மலை

கலந்கிடுவேனோ பதரிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே – சீயோனிலே

புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் – சீயோனிலே

வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் – சீயோனிலே

மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரைவழியே தம்சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி – சீயோனிலே

நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
முடிவு வரை என்னை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே – சீயோனிலே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS