Thuthigalin Maththiyil | துதிகளின் மத்தியில்

Loading

துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
துதி கன மகிமைக்கு பாத்திரர் நீரே
நன்றியால் உள்ளம் பொங்கி வழியுதே
தேவனே உம்மையே போற்றியே புகழ்வேன்

முழங்கால் மடக்கி உம்மையே துதிப்பேன்
தேவனே நான் உம்சொந்த சம்பத்தல்லோ (2)
கருவில் என்னைக் கண்டவர் நீரே
உந்தன் வாசலில் துதியோடு வருவேன் – துதிகளின்

ஓசையுள்ள கைத்தாளமுடன் துதிப்பேன்
எந்தன் பாவங்கள் எல்லாம் நீக்கினதால்
பாவியான என்னை சுத்தனாய் மாற்றி
பரிசுத்தவான்களின் சபையில் சேர்த்தீர் ஐயா – துதிகளின்

மகிழ்ச்சியால் நிறைந்தும்மை பாடியே துதிப்பேன்
மகிபனே நீர் எங்கள் மத்தியில் வந்தீரே
ஆலயத்தில் உம் மகிமையைப் பொழிந்தீர்
ஆடி பாட உம் பிரசன்னத்தை தந்தீர் – துதிகளின்

ஆவியால் நிறைந்து உம்மையே துதிப்பேன்
மறுரூப வாழ்வை எனக்கும் நீர் அளித்தீர்
ஆவி ஆத்மா தேகம் முற்றுமே உமக்கே
பலியாக்கி என்றென்றும் உம்மையே துதிப்பேன் – துதிகளின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS