To Advertise Contact - christmusicindia@gmail.com

Ugantha Kaanikkaiyaay | உகந்த காணிக்கையாய்

Loading

உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமையா

தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்  – உகந்த

வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே

கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் – என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம குரல் கேட்கணும் – என்

அப்பா உம சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS