To Advertise Contact - christmusicindia@gmail.com

Ulagor Unnai | உலகோர் உன்னை

Loading

உலகோர் உன்னைப் பகைத்தாலும் 2
உண்மையாய் அன்பு கூருவாயா? 2
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா (2)

பல்லவி
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்? 2

உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்றும் கூறுவாயா?
ஊழியம் செய்ய வருவாயா? (2) – உனக்காக

மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப் புல்வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? (2) – உனக்காக

இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2) – உனக்காக

ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்,
யார் தான் போவார் எனக்காக? (2) – உனக்காக

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS