To Advertise Contact - christmusicindia@gmail.com

Ummai Thuthippaen Karththaathi | உம்மை துதிப்பேன் கர்த்தாதி

Loading

பல்லவி
உம்மை துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் அதிசயமானதே!
உம்மைத் துதிப்பேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே!

என்னை ஆராய்ந்து அறிந்து இருக்கிறீர்
என் நினைவுகளையும்! – தூரத்தில் அறிவீர்!
என் நாவினிலே சொல் பிறவா முன்னமே
என் தேவனே அவை யாவும் அறிவீர்! – உம்மை

உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகலும் போல் வெளிச்சமாகுதே
உமது கரத்தை என் மேல் வைக்கிறீர்
இந்த அறிவு ஆச்சரியமானதே – உம்மை

என்னைச் சோதித்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்திய வழி என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட – உம்மை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS