Vaarum devaa Vaana | வாரும் தேவா வான

Loading

வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்திடுமே

பாவம் அகற்றினீரே – உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன்
பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே

ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே – ஜனம்
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே

அற்புத அடையாளங்கள் – இப்போ
அணைந்தே குறைந்திடுதே – வல்ல
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே

கறைகள் நீக்கிடுமே – திருச்
சபையும் வளர்ந்திடவே – எம்மில்
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே

கிருபை பெருகிடவே – உம
வருகை நெருங்கிடுதே – மிக
ஆத்ம மணாளனைச் சந்திக்கவே
ஆயத்தம் அளித்திடுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS