Vaasalandai Nindru | வாசலண்டை நின்று

Loading

பல்லவி
வாசலண்டை நின்று ஆசையாய்த் தட்டும்
நேசர் இயேசுவுக்குன் னுள்ளம் திறவாயோ

அனுபல்லவி
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே

ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயோ
காணாத ஆட்டை தேடி வந்த மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையிர் சேர்த்திடுவார் – வாசலண்டை

அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமோ
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய் – வாசலண்டை

பாவத்தினால் சாப ரோகத்தில் தொய்ந்து
மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ – வாசலண்டை

மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
பிறந்தாலே ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய்
பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் – வாசலண்டை

வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
இயேசு வல்லால் வேறு இரட்சிப்பில்லையே
இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ – வாசலண்டை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS