Vaazhththugiren Iyesu | வாழ்த்துகிறேன் இயேசு

பல்லவி
வாழ்த்துகிறேன் இயேசு ராஜா
வாழ்த்துகிறேன் இக்காலையிலே

அனுபல்லவி
அற்புதமாய் இரா முழுவதும்
அடியேனைக் காத்தீரே

உமது சேட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுவதும்
உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் – வாழ்த்துகிறேன்

நித்திரையை இன்பமாக்கிப் பத்திரமாய் இருதயத்தைச்
சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருக்கிறீர் – வாழ்த்துகிறேன்

பலவிதமாம் சோதனைகள் எமைச்சூழ வந்திருக்கும்
ஒன்றும் எமை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் – வாழ்த்துகிறேன்

சந்திப்பீரே இக்காளைதனில் தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய்ப் பகல் முழுவதும் ஆவிக்குள் யான் பிழைக்க – வாழ்த்துகிறேன்

தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புதுநாளில்
நடத்திடுவீர் ஆவியினால் உமது திருசித்தமதில் – வாழ்த்துகிறேன்

பாவமொன்றும் அணுகிடாமல் பைசுத்தமாய்ப் பாதை செல்லத்
தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் – வாழ்த்துகிறேன்

படைக்கிறேன் என் இருதயத்தைப் பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக – வாழ்த்துகிறேன்

செய்வேன் யான் எப்போதும் உம சித்தமே ஆசையுடன்
ஒழித்திடுவேன் வீண் வார்த்தை பேசிடுவேன் உம் – வாழ்த்துகிறேன்

என்னைக்கான்போர் உம்மைக்கான உம் சாயல் எனில் வேண்டும்
தந்திடுவீர் தாழ்மையையும் பொறுமையுடன் அன்புமாக – வாழ்த்துகிறேன்

நேசரே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக் கொள்ளும் – வாழ்த்துகிறேன்

Close Menu
error: Content is protected !!