To Advertise Contact - christmusicindia@gmail.com

Viduthalai | விடுதலை

Loading

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே – 2
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை
கொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை – 2
என்ன சந்தோஷம் இந்த – விடுதலை (2)
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (2) – விடுதலை

எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே – விடுதலை

அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே – விடுதலை

மாறிட்ட எந்தன் உள்ளத்தில் விடுதலை
மாறிடா அன்பர் அடிமையாய் மாற்றிடுதே
என்ன சந்தோஷம் இந்த அடிமைக்கு
மீட்கும் அன்பை ருசித்திடவே ஆவலில்லையோ – விடுதலை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS