To Advertise Contact - christmusicindia@gmail.com

Maa Thayavae Deva Thayavae | மா தயவே தேவ தயவே

Loading

மா தயவே தேவ தயவே
மானிலத்தில் தேவை எனக்கே

வாக்களித்த வானபரன்
வாக்கு மாறார் நம்பிடுவேன்
நம்பினோரைக் கைவிடாரே
நர்பாதமே சரணடைந்தேன் – மா

ஏசுவின் பொன் நாமத்தினால்
ஏதென்கிலும் கேட்டிடினும்
தம் சித்தம் போல் தந்திடுவார்
தந்தையிவர் எந்தனுக்கே – மா

சத்துருக்கள் தூஷித்தாலும்
சக்தியீந்தென பட்சம் தந்திடுவார்
ஆதரவே அளித்திடுவார்
ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் – மா

என்னில் ஏதும் பெலனில்லையே
எந்தனுக்காய் இராப்பகலாய்
நீதியுள்ள நேசர் இயேசு
நித்தியமாய் பரிந்துரைப்பார் – மா

தாய் வயிற்றில் இருந்த முதல்
தமக்கே என்னை தெரிந்தெடுத்தார்
என் அழைப்பும் நிறைவேற
எப்படியும் கிரியை செய்வார் – மா

தம் வருகை தரணியிலே
தாமதமாய் நடந்தினும்
சார்ந்தவரை அனுதினமும்
சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் – மா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS