மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே மனக் களிப்புடனே
மாண்புகழ் ஏசுவை வானவரோடே
காலை மாலை உறங்காரே நம்
காவலனாய் இருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவீரே – மாலை
கிருபையின் வாக்கு தந்தாரே – அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே – மாலை
சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
சாதனையாகவே நிற்கச் செய்தாரே – மாலை
அழைத்த மெய் அழைப்பிலே தானே – நாம்
உழைத்திட பெலன் தந்ததேனே
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே – மாலை
வயல் நிலம் ஏராளம் காட்டி – அதின்
அறுவடை தாராளம் ஏற்றி
அறிக்கட்டோடே வர கிருபை செய்தாரே – மாலை
ஆணி துளைத்திடதானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
ஏகமாய் ஏசுவின் நாமத்தைத்தானே – மாலை
ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பைத் துதிக்கப்போதாது
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம் – மாலை
உன்னதருக்கு மகிமை இந்தப்
பூமியிலே சமாதானம்
மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே – மாலை