fbpx

Maaridaathor Nesa | மாறிடாதோர் நேச

மாறிடாதோர் நேச மீட்பர்
மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் நோயினாலும்
வருந்துவானேன் நம்பி வா….

நம்பி வா…. நீ (2)
இயேசு உன்னை அழைக்கிறார் (2)

லோக மாந்தர் கைவிடுவார்
துரோகம் கூறித் தூற்றுவார்
தூய இயேசு அருகில் வந்து
துன்பம் தீர்ப்பார் நம்பி வா – நம்பி

நல்ல மேய்ப்பர் கண்ணீர் யாவும்
வற்றிப் போகச் செய்குவார்
வற்றா ஜீவ ஊற்றாம் உன்மேல்
என்றும் ஊரும் நம்பி வா – நம்பி

அப்பா இயேசு தேவை எல்லாம்
அற்புதமாய் சந்திப்பார்
அன்னை போல அரவணைத்து
ஆற்றித் தேற்றி நடத்துவார் – நம்பி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS