Magimai Maatchimai | மகிமை மாட்சிமை

மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசு
பணிந்தே தொழுகுவோம்

உன்னத தேவன் நீரே
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே
என்றும் தொழுதிடுவோம்

ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே
ஒளியினை தந்துமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளி நிறைவே அருள் நிறைவே
என்றும் தொழுதிடுவோம்

பரிசுத்த தேவன் நீரே
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே
என்றும் தொழுதிடுவோம்

நித்திய தேவனும் நீரே
நீதி நிறைந்தவரே
அடைகலமானவரே
அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே
என்றும் தொழுதிடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS