To Advertise Contact - christmusicindia@gmail.com

Magimai Mel Magimai | மகிமை மேல் மகிமை

Loading

மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மறுரூபமாவேன் மனமதிலே
மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் முகமே

உந்தன் பாதம் என்னை பலியாய்
உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்
ஏற்றுக் கொண்டருளும் தேவ பெலன் விளங்கும்
தேற்றி உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால் – மகிமை

தேவ சாயல் தேவ சமூகம்
தேவ பிள்ளைகள் அடையும் பாக்கியம்
எந்தன் வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்
என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால் – மகிமை

ஜீவ ஜாலமே பொங்கி வருதே
ஜீவ ஊற்றுகள் திறந்தனவே
தம் கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்
தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால் – மகிமை

பாதம் ஒன்றே போதும் என்றேன்
பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன்
இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே
என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால் – மகிமை

திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன்
தூய வாழ்க்கையின் தேவை அதுவே
தேவ சேவையிலே பாடு சகித்திடவே
தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால் – மகிமை

ஆவி, ஆத்மா தேகம் முழுவதும்
அன்பர் இயேசுவின் சொந்தமாமே
பூரணம் அருளும் ஆயத்தப்படுத்தும்
பாடிப்பரந்திடுவேன் – தம் ஆவியினால் – மகிமை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS