Magimaiyadaiyum Iyesu | மகிமையடையும் இயேசு

மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக – வருக

உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா

பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே

சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே

என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா

கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக

நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா