To Advertise Contact - christmusicindia@gmail.com

Magizhvom Magizhvom Thinam | மகிழ்வோம் மகிழ்வோம் தினம்

Loading

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்

பல்லவி
ஆஆ…. ஆனந்தமே
பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே

சின்னச்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
“ஜீவன் பெற்றுக்கொள்” என்றுரைத்தார்

எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொருப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

அவர் வரும் நாளிலே என்னைக் கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார்
அவர் சமூகமத்தில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS