To Advertise Contact - christmusicindia@gmail.com

Malaigal Vilagiye Ponaalum | மலைகள் விலகியே போனாலும்

Loading

மலைகள் விலகியே போனாலும்
நிலைவிட்டு பர்வதம் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னை விட்டு விலகிடாதே
என் சமாதானம் நிலைக்குமென்றாரே

வானம் பூமி யாவுமே மாறிடினும்
வானவரின் வாக்கு மாறிடாதே
மானிடர்கள் மனம் மாறிடுவார்
மாறிடா இயேசுவை நம்பி நிற்போம்

யேகோவா என்னும் நாமமுள்ளவர்
என்னை நோக்கி கூப்பிடு என்றுரைத்தார்
அறியா எட்டா பெருங் காரியங்களை
அறிவிப்பேன் நிச்சயம் என்றனரே – வானம்

திகையாதே நான் உந்தன் தேவன்
திக்கற்றோனாய் ஒருபோதும் கைவிடேன்
நீதியின் வலக்கரத்தாலே உன்னை
நித்தமும் தாங்கிடுவேன் என்றனரே – வானம்

என் பிதாவின் நித்திய வீட்டினிலே
ஏராளம் வாசஸ்தலம் அங்குண்டே
எனக்கோர் ஸ்தலத்தை ஆயத்தமாக்கியே
என்னை சீயோனில் சேர்க்க வந்திடுவார் – வானம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS