To Advertise Contact - christmusicindia@gmail.com

Malaimel Yaeruvom | மலைமேல் ஏறுவோம்

Loading

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம்

நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா

திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன்

மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்

தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே

சாப்பிட்டும் திருப்தியில்லை குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம் குளிரோ போகவில்லை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS