fbpx

Mana Magizha Iyaesuvai | மன மகிழ இயேசுவை

மன மகிழ இயேசுவை நாடு
மாந்தரின் துன்பங்கள் தீர்ப்பவரே

குணமாக்கும் தழும்புகள் கண்டிடுவாய்
குருசின் காட்சியை அண்டிடுவாய்
தடுமாறும் உள்ளங்கள் திகழ்ந்திடவே
தற்பரன் பாடுகள் ஏற்றனரே – மனம்

நெருக்கப்பட்டார் நமக்காய் ஒடுக்கப்பட்டார்
வாய் திறவாமல் அன்று பொறுத்து நின்றார்
இடுக்கண்ணில் உன்னை காத்திடவே
இயேசு சிலுவையில் அறையப்பட்டார் – மனம்

துன்மார்க்கரோடு தாழ்த்தப்பட்டார்
ஐசுவரிய முன்னோராய் உயர்த்தப்பட்டார்
கொடுமை செய்யாதவர் கைவிடாரே
கர்த்தரின் அன்பை ருசிப்பாயோ – மனம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS