Manam Magizhnthu Thinam | மனம் மகிழ்ந்து தினம்

மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து
ஆவியில் ஆர்ப்பரிப்போம்
ஆத்துமா நேசர் அன்பர் இயேசு
வேகம் வருகின்றாரே

ஆயத்தமாகிடுவோம் நாமே
அயராது உழைத்திடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
அவர் துதி பாடிடுவோம்

விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு
உலகினை ஜெயித்திடுவோம்
மகிமையை நோக்கி உலகினை மறந்து
ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்

வசனங்கள் நிறைவேறும் கடைசி காலம்
கருத்தினில் கொண்டிடுவோம்
ஜீவ சுடரொளி பட்டயம் ஏந்தி
சாத்தானை ஜெயித்திடுவோம்

ஆவியின் வரங்கள் யாவுமே பெற்று
ஜோதியாய் விளங்கிடுவோம்
தேவ குமாரன் இராஜாதி இராஜா
வேகம் வருகின்றாரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS