Manathariyum Magaa Pirabuve | மனதறியும் மகா பிரபுவே

மனதறியும் மகா பிரபுவே
மனதின் விசாரம் தீர்த்திடுமே
தீமைகள் அகற்றும் உம் கரங்கள்
தாங்கி துணை எனக்களித்திடுமே

கஷ்டமாம் வாழ்க்கை தீச்சூளையை நான்
கடக்கும் போது நீர் அருகில் உண்டே
வல்லமை தந்திடும் உந்தனின் பிரசன்னம்
வேதனை கண்ணீரை மாற்றிடுமே

வாழ்க்கையின் மேடுகள் கடந்திடும்போது
வலக்கரம் பிடித்தென்னை நடத்திடுமே
வாடி தளர்ந்து திகைத்திடும் போது
தோளில் சுமந்திடும் மேய்ப்பரல்லவோ

தண்ணீரைக் கடந்தோம் தேவனின் தயவால்
தாண்டினோம் மதிலை அவர் பெலத்தால்
ஆண்டு கொள்ளும் எங்கள் வாழ்க்கையின் பயணம்
மீட்டெடுத்த எங்கள் மேசியாவே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS