Mannan Iyaesu Varugindraar | மன்னன் இயேசு வருகின்றார்

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தப்படு

அல்லேலூயா ஆனந்தமே
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு

மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் இவர் கின்னரத்தோட்டம்
லீளிபுஷ்பமே! சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையானவர்

பொற்தளவீதி அது பொற்பரன்வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப் பச்சை மரகதமும் பாடிப் போற்றுதே

வென்குதிரைமேல் உலாவ வருகின்றார்
வெண் கிரீடமும் தலையில் ஜொலித்திடுதே
வெண் சிங்காசனம் புன்சிரிக்குது
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுது

Close Menu
error: Content is protected !!