To Advertise Contact - christmusicindia@gmail.com

Maranamae | மரணமே

Loading

மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு
எனக்குள் வந்துவிட்டார்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்குத் தந்துவிட்டார்

எனக்கு அதிபதி சாத்தானை – இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்

பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்

அழிவுக்குரிய இவ்வுடல் ஒருநாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாகாமை அணிந்து கொள்ளும்

இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மறித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்

கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்குள் வாழ்வோர் (மரித்தோர்)
எதிர் கொண்டு சென்றிடுவோம்

பூமிக்குரிய கூடாரமான
இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு

ஆகாரமும் நகரமும் தொடக்கமும் முடிவும்
நான் தானே என்று சொன்னவர்
அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க
சீக்கிரத்தில் வருகின்றார்

பரிசுத்தவான்களின் மரணம் என்றும்
கர்த்தரின் பார்வையிலே
அருமையானது மதிப்பிற்குரியது
மகிழ்ந்து கொண்டாடு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS