Mega Meethinil Vegamudan | மேக மீதினில் வேகமுடன்

Loading

பல்லவி
மேக மீதினில் வேகமுடன்
மேசியா ஏசுவே வந்திடுவார்

மின்னலைப் போன்ற பேரொளியில்
மத்திய வானில் தோன்றிடுவார்
எண்ணிலடங்கா பக்தர்களும்
வின் தூதசேனை சூழ்ந்திடவே – மேக

யூதர்கள் கூடி சேர்ந்தனரே
வேதமும் நிறை வேறிடுதே
இவ்வடையாளம் நோக்கிடுவோம்
இயேசுவின் நாளை சந்திக்கவே – மேக

தாமதம் ஏனோ தம் வருகை
தீவிரம் வந்தால் நம் நிலைமை
காகள சத்தம் கேட்டிடுமோ
கர்த்தரைக் காண ஆயத்தமா – மேக

காலம் இனியும் சென்றிடாதே
காலையோ மாலை இராவினிலோ
நாம் நினையாத நேரத்திலே
நன்மையையும் கர்த்தர் தாம் அழைப்பார் – மேக

இந்த கடைசி காலத்திலே
இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம் – மேக

கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்
கர்த்தருக்காகக் காத்திருப்போம்
ஆனந்தமான நாள் நெருங்க
ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம் – மேக

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS