Mudiyaathu Mudiyaathu | முடியாது முடியாது

முடியாது முடியாது
உம்மை பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது  – என்னால் (இயேசையா)

திராட்சை செடியே உம் கோடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்

மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே

குயவன் நீர் களிமண் நான் – உமது
விருப்பம் போல் வனைந்து கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்

பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
எதையும் செய்திட பலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்

எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால், உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன்  – இயேசையா

பூமியிலே பரதேசி நான் – உமது
வார்த்தையை ஒருபோதும் எனக்கு
மறைத்து விடாதேயும்

உம் வழிகள் கற்றுத்தாரும்
இறுதி வரை நான் பற்றிக் கொண்டு
எந்நாளும் கடைபிடிப்பேன்