Munnorgal | Jebathotta Jeyageethangal Vol 39 | Fr.S.J.Berchmans – Lyrics

முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள்
(முகம்)வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை

கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற
வல்லவர் என்று
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான்

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக்கொண்டு

சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர்
சொன்ன வாக்குறுதியை
பிடித்துக்கொண்டு
தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான்

தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான்

error: Content is protected !!
ADS
ADS
ADS