நாம் ஆராதிக்கும் தேவன் நல்ல தேவன்
நாம் ஆராதிக்கும் தேவன் வல்ல தேவன்
நாம் ஆராதிக்கும் தேவன் பெரிய தேவன்
அவர் ஆதியந்தம் இல்லாதவர் – ௨
அவர் ஆதியந்தம் இல்லாத அன்பு தேவன்
அவர் அல்பா ஒமேகாவும் ஆனா தேவன்
அற்புதங்கள் அதிசயங்கள் செய்யும் தேவன்
அவரை அண்டினோரை ஆதரிக்கும் அருமை தேவன்
ஒரு பாவமில்லா பரிசுத்தராம் பூரண தேவன்
எந்த பாவியையும் தள்ளாத பரம தேவன்
பாவிகளை மீட்க வந்த இரட்சகர் தேவன்
உந்தன் பாரங்களை ஏற்ற எந்தன் இயேசு தேவன்
உன் பேரைச் சொல்லி அழைத்த தேவன் உண்மை தேவன்
உன்னில் பெரிய காரியம் செய்திடுவார் உன்னத தேவன்
மகிமையாலே நிறைந்திடுவார் மகிமை தேவன்
அவர் சித்தம் உன்னில் செய்திடுவார் நித்திய தேவன்
நீ போகுமிடமெல்லாமே வந்திடும் தேவன்
உன் போக்கையும் வரத்தையும் காத்திடும் தேவன்
உன் தேவையெல்லாம் சந்தித்திடும் நற்குண தேவன்
உன்னைத் தாங்கி என்றும் காத்திடுவார் கருணை தேவன்